‘நம்ம ஊரு சூப்பரு’ சிலமலை ஊராட்சியில் சாக்கடை வசதியில்லாமல் சாலையில் ஆறாய் ஓடுது கழிவு நீர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

சிலமலை பஞ்சாயத்தில், தேவாரம் சாலையில் சாக்கடை ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

‘நம்ம ஊரு சூப்பரு’ சிலமலை ஊராட்சியில் சாக்கடை வசதியில்லாமல் சாலையில் ஆறாய் ஓடுது கழிவு நீர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட சிலமலை ஊராட்சியில்  சாக்கடை வசதி இல்லாத அவலத்தால், சாக்கடை கழிவு நீர் தேவாரம் செல்லக் கூடிய பிரதான சாலையில் ஆறாய் வழிந்தோடி அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டோடு ஒரு வித தொற்று நோய் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக தேவாரம் செல்லக் கூடிய பிரதான சாலையில் சுகாதார சீர்கேடு என்பதால் அவ்வழியே பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் நோய் தொற்று பரவும் சூழலில் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியினரிடம் கேட்டபோது, சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.  மாவட்ட நிர்வாகம் சுகாதார சீர்கேட்டை கவனத்தில் கொண்டு சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- செய்தியாளர் சுகன்யா முரளிதரன், தேனி
நிழல்.இன் - 8939476777