மதுரை முதியோர் இல்லத்திற்கு எல்.ஈ.டி லைட் வழங்கிய வழிகாட்டி மணிகண்டன்!

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் எல்.ஈ.டி விளக்குகள் வழங்கினார்.

மதுரை முதியோர் இல்லத்திற்கு எல்.ஈ.டி லைட் வழங்கிய வழிகாட்டி மணிகண்டன்!

மதுரை சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் இரவு நேரத்தில் சாப்பிடும் அறை குறைவான வெளிச்சத்தில் இருந்த நிலையில் முதியோர்கள்  சிரமப்பட்டனர். இதனை அறிந்த வழிகாட்டி மணிகண்டன் தமது தனிப்பட்ட சேமிப்பு மூலம் எல்.ஈ.டி விளக்குகளை வாங்கி இல்லத்தின் மேலாளர் கிரேசியஸ் முன்னிலையில் முதியோர்கள் கையில் வழங்கினார்.

அவர்கள் அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டதோடு உடனடியாக உணவு அறையில் ஒளியூட்டி வழிகாட்டி மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்தனர்.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777